ஹர்மன் அடிகளார் ஸ்வாமிகள்
இந்தக் கூட்டத்தில எவன்டா என்ன 'கருமன் சாமி'ன்னு சொன்னவன்?
@@@@
எம் பையந் தாங்க சாமி.
@@@@
என்ன 'தர்மன் சாமி'ன்னு சொன்னக்கூட பரவாயில்ல. "கருமன் சாமி"-ன்னு உம் பையன் சொல்லிருக்கிறான்.ஏன்டா பக்தா, நான் கருமம் பிடிச்ச சாமியா?
@@@@
சாமி எம் பையனால ஹர்மன்ங்கற உங்க பேர உச்சரிக்க முடியாதுங்க சாமி.
@@@@
எம் பேர எந்த பக்தனாவது தவறா உச்சரிச்சா சொன்னவன் பத்தாயிரம் கொடுத்துட்டுத்தான் நம்ம ஆசிரமத்த வீட்டுத் தாண்டமுடியும்.
@@@
டேய் முதன்மை பக்தா இங்க வாடா.
@@@@
சொல்லுங்க சாமி.
@@@
என்னுடைய முழுப்பேரையும் இந்த பக்த கோடிகளுக்குச் சொல்லடா.
@@@@@
சாமி அவர்களைத் தரிசிக்க வந்த பக்தர்களே. சாமி அவர்களின் முழுப்பெயர்:
ஶ்ரீலஶ்ரீ பக்தியானந்த பரமாச்சர்ய ஹர்மன் அடிகளார் ஸ்வாமிகள்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Harman = everybody's beloved.