வாழ்க்கையில் வசந்தம்

வாழ்க்கையில் வசந்தம்
***********************************************
கிள்ளையும் மழலையும் செங்கீரைப் பருவமும்
பாவையின் அழகும் பெதும்பையின் எழிலும்
பெண்மையும் நாணமும் மகளிரும் மஞ்சளும்
மலரும் வண்டும்போல் அமைந்திடும் காதலும்
தலைவனும் தலைவியும் சேர்ந்திடும் மஞ்சமும்
கெஞ்சும் கொஞ்சலில் மலரும் மதுரமும்
மேல்திசை வாடையும் தென்றலின் சுகமும்
ஊடலும் கூடலும் கூடிட இன்பமும்
தேனோடு பாலில் தெவிட்டா நிலையம்
பிள்ளையைத் தாயவள் அணைத்திடும் மகிழ்வும்
பாசமும் நேசமும் பிரிவில்லா நட்பும்
கற்றபடி நடப்பும் மெய்யும் வாக்கும்
தண் நிறை நெஞ்சமும் மாசற்ற செய்கையும்
இராகமும் தாளமும் பிழையில்லா கீதமும்
மொழியில் தமிழும் தமிழின் சொற்களும்
சொற்களின் நடையில் சொல் இடும் கவியும்
கவிதையின் அழகும் அதனூடே வெண்பாவும்
எழுத்துத் தளமுமதன் நிகரில்லா தோழர்களும்
இப்பிறவிப் பெருங்கடலில் நல்லபடி அமைந்திட
வாழ்க்கையொரு வசந்தம் சத்தியம் சத்தியமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Jan-19, 4:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 124

மேலே