மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு


காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்


சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்


வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!


பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே


முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்


பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!


எழுதியவர் : hishalee (27-Aug-11, 5:50 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 379

சிறந்த கவிதைகள்

மேலே