என்னை நெஞ்சில் அணை

பஞ்சு பொதியாய் நெஞ்சு மாறியதே
அஞ்சுகமே உன் கொஞ்சு தமிழை கேட்கையிலே
விஞ்ச முடியா தமிழ் மொழியின் வீரிய சொல்லால்
ஊஞ்சல் கட்டி ஆட்டுவதைப் போல் உள்ளதடி

மஞ்சள் ஒளி மின்னுகின்ற மஞ்சரியே
தஞ்சம் நீயே என்று நானும் கெஞ்சுகிறேன்
வஞ்சி கொடியே வந்து என்னை நெஞ்சில் அணை
கொஞ்சி கொஞ்சி நாமும் பேசி குதுகலிப்போம்

நஞ்சை நிலம் உன் நெஞ்சம் என்றால் நானே விதை
காய்ந்த கோ போல் கண்டேன் உன்னை நீயே கம்பு
காதல் மழையில் துளிர்த்தேன் நானே எனை நீ நம்பு
பதித்தேன் உனை நான் சதியாய் என்னுள் பதியாய் நானே.
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Jan-19, 5:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 203

மேலே