தமிழ்நாட்டில் சாதி ஒழிந்ததா

தமிழ்நாட்டில் சாதி ஒழிந்ததா???


இந்த கேள்வி பரவலாக கேட்கப்படக்கூடிய கேள்வி, இவ்வளவு சலுகைகள் இவ்வளவு இட ஒதுக்கீடு கொடுத்து தமிழ்நாட்டில் சாதி ஒழிந்ததா? இது அனைத்தும் சாதியை வளர்க்கிறது என்பது பலரின் கேள்வியாகாவே இருக்கும்.

எனது முந்தய தலைமுறை ஓர் சாதியினரைப் பெயரைச் சொல்லியோ, அல்லது மரியாதைக் குறைவாகவே அழைத்தனர், அவர்களும் வந்து கை கட்டி திருப்பி எதுவும் பேசாமல் சொல்லுங்க பண்ணாடி( முதலாளி) என்று வந்து ஓர் புழுவைப்போல் ஓடுங்கி நின்றார், உண்மையில் அதை நினைத்தால் இன்றும் உள்ளம் நடுங்குகிறது. அந்த முதியவரை நானும் அறியா வயதில் பெயர் சொல்லியே அழைக்கின்றேன் அவரும் சற்றும் யோசிக்காமல் சொல்லுங்க சின்ன பண்ணாடி என்றார், சிறிது நாட்கள் கழித்து பள்ளி செல்லும் பருவம்,, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவது வழக்கம் தட்டு தடுமாறி கீழே விழுகிறேன், அப்பொழுது என்னைவிட வயதில் சற்று பெரிய வாலிபர், அவர் என்னை தூக்கிவிடுகிறார், பாத்து ஓட்டு கண்ணுன்னு சொல்லிட்டு போனார், நானும் சரிங்கான்னா என்றேன், சிறிது நாட்கள் கழித்து அந்த முதியவருடன் அவரைக்கண்டேன் அப்பொழுதுதான் அறிந்தேன் அவர் அந்த முதியவரின் மகன் என்று, நான் மட்டும் அல்ல பலரும் எனது பருவத்தில் உள்ளவர் அந்த முதியவரைப் போல இழிவாக இல்லாமல் கொஞ்சம் மரியாதையாகவே அந்த வாலிபரை அழைத்தனர், அவர் வயது ஒத்தவர்கள் பெயர் செல்லி சற்று மரியாதையாகவே அழைத்தனர், ஆயினும் அவரால் அந்த சாதி பிடியில் மீளா முடியாமல் தன் சக வயதினரையும் சிறியவர்களையும் செல்லுங்கா ( பெயர் சொல்லமாட்டார்), சிறுவர்களையும் மரியாதையாக சொல்லுங்க கண்ணு என்று மரியாதையாகவே அழைப்பார்,

காலம் உருண்டோட கொஞ்சம் வருடங்களுக்கு பிறகு எனது அக்காவின் மகன் அவன் நண்பனை பார்க்க அழைத்து செல்ல சொன்னான், அவன் நண்பனை பார்த்தான் டேய் என்று அழைத்தான், வாடா என்றான் அவனும் உள்ளே கூட்டி கொண்டு போய் விட்டான் அந்த சிறுவன், ஆனால் எனக்கு அது பெரிய அதிர்ச்சியை தந்தது அங்கு முற்றத்தில், அந்த பெரியவர் என்னை கண்டு பண்ணாடி நல்ல இருக்கீங்களா என்றார், பெரிய பண்ணாடி நல்ல இருக்கிறரா என்று நலம் விசாரித்தார், பதிலுக்கு நானும் விசாரித்து விட்டு வந்து விட்டேன்.

அந்த சிறுவன் பெரியவரின் பேரன் என்றும் அங்கு நடந்ததையும் என் நண்பனிடம் கூறினேன் அவன் சொன்னான் அவன் சற்று கோபத்துடன் அவனுக எல்லாம் வளந்துடாங்காடா மதிக்கூட மட்டிங்கிறானுக என்றான், இவனெல்லாம் மரியாதையை பற்றி பேசுகிறான், இவன் கொடுத்து இருந்தால் கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு சென்றுவிட்டேன், அவன் சொன்னதை சற்று யோசித்த போது புரிந்தது, அவன் பெற்றோர் செய்த இழிவை கண்டு வளர்நதமையால் இந்த சமபந்தி போஜனத்தை ஏற்க அவனின் வறட்டு கர்வம் மறுக்கிறது, அடுத்த தலைமுறைக்கு அந்த இழிவை கான வாய்ப்பு இல்லாமையால் மனிதனை சக தோழனாய் எற்றுக் கொண்டது அடுத்த தலைமுறை..

அந்த பெரியவரின் காலத்தில் சாதி ஒழிப்பு பேசு பொருளாய் ஆனாது, நம் தலைமுறையில் விவாதப் பொருளாய் கூர்மையடைந்தது, நாளைய தலைமுறையில் வீழ்ச்சியடையும்.. என்பதே இந்த நிகழ்வின் புரிதலாய் அமைந்தது எனக்கு….

எனது நண்பனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வே..


இங்கனம்
தௌபீஃக்

எழுதியவர் : (26-Jan-19, 2:33 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 166

சிறந்த கட்டுரைகள்

மேலே