நிறைவுற்றது சென்னை புத்தகக்காட்சி

சஞ்சாரம்

எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி.

மார்க்சியம் இன்றும் என்றும்

விடியல் வெளியீடு.

தொ.பரமசிவன் புத்தகங்கள்

காலச்சுவடு வெளியீடு.

மூளைக்குள் சுற்றுலா

வெ.இறையன்பு, என்சிபிஹெச் வெளியீடு.

வால்காவிலிருந்து கங்கை வரை

ராகுல் சாங்கிருத்தியாயன், பாரதி புத்தகாலயம்.

அக்னி நதி

குல் அதுல்ஜன் ஹைதர், என்பிடி வெளியீடு.

கசார்களின் அகராதி

மிலோராத் பாவிச், எதிர் வெளியீடு.

பெத்தவன்

இமையம், க்ரியா வெளியீடு.

சிலைத் திருடன்

எஸ்.விஜய் குமார், கிழக்கு வெளியீடு.

கங்காபுரம்

அ.வெண்ணிலா, அகநி வெளியீடு.

புத்தக வெளியீட்டுக்காக 3,000 கி.மீ. பயணம்!
பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தனது ஐடி வேலையைத் துறந்துவிட்டு, ஒரு சமூக சேவகராகத் தன்னை உருமாற்றிக்கொண்ட எழுத்தாளர் நசீமா ரசாக், தனது புத்தக வெளியீட்டுக்காக துபாயிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வந்திருந்தார். அமீரகத்தில் கடந்த 9 வருடங்களாகப் பெண்களுக்கான சுயமுன்னேற்ற வகுப்புகளை நடத்திவரும் இவர், தனது அனுபவங்களை ‘என்னைத் தேடி’ எனும் நாவலாக எழுதி வெளியிட்டிருக்கிறார். “எனது எழுத்தையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக அர்ப்பணிப்பதென்பது எனது வாழ்வை அ

----------------

‘சென்னை புத்தகக்காட்சி - 2019’ நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ கல்லூரியில் ஜனவரி 4 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜனவரி 20 வரை நடந்தது. இம்முறை 17 நாட்கள்! இந்தப் புத்தகக்காட்சி பல லட்சம் வாசகர்களை ஒன்றுதிரட்டியிருக்கிறது. பல்வேறு புகார்களைக் கடந்தும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. மாபெரும் கொண்டாட்டமாக நடந்து முடிந்த புத்தகக்காட்சியைக் கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்...

சாதித்தார் பதிப்பாளர் ராமகிருஷ்ணன்
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது ‘தேசாந்திரி’ பதிப்பக அரங்கில் கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் வந்திருந்து வாசகர்களோடு கலந்துரையாடினார். இந்தப் புத்தகக்காட்சியில் அதிக எண்ணிக்கையில் கையெழுத்திட்ட எழுத்தாளர் இவர்தான்! எவ்வளவு கூட்டமிருந்தாலும், எத்தனை புத்தகங்களில் கையெழுத்திடச் சொன்னாலும் மிக நிதானமாக, ‘மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்’ என்று கையெழுத்திட்டு செல்ஃபிக்குப் போஸும் கொடுத்துக்கொண்டிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனுக்குக் கடுமையாகப் போட்டிபோட்டுக்கொண்டிருந்தவர் சாரு நிவேதிதா. ‘ஸீரோடிகிரி’ பதிப்பகமும் வெற்றிகரமாக ஒரு ஆண்டை நிறைவுசெய்திருக்கிறதாம். ‘உயிர்மை’யில் வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் வாசகியர் சூழ இருந்தார். நான்கு மூர்த்திகளில் ஜெயமோகன் மட்டுமே பாக்கி. அடுத்த வருடத்தில் ஜெயமோகனும் ‘விஷ்ணுபுரம்’ பதிப்பகம் தொடங்கப்போவதாக ஒரு வதந்தி உலாவருகிறது.

கொள்கைப் பெரியார் கோடி கைகளில்
பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்துக்காக மட்டுமே ஒரு அரங்கு அமைத்திருந்தார்கள். ‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ல் ஆரம்பித்த இலக்கு, பெரியாரின் நினைவுதினத்துக்கு முன்பாகவே நிறைவேறியது. அதைத் தொடர்ந்து, ‘கொள்கைப் பெரியார் கோடி கைகளில்’ என மந்திரத்தை மாற்றிக்கொண்டு புத்தகக்காட்சியில் களம் இறங்கியிருந்தார்கள்!

அடுத்த முறையாவது யோசியுங்கள்
சிறார் புத்தகங்கள், ஆன்மிகம், சுயமுன்னேற்றம், இலக்கியம் என வகைமைப்படுத்திப் புத்தகக்காட்சியின் அரங்குகளை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் புத்தகக்காட்சி தனது அரங்கு வடிவமைப்பையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மிக நீண்ட வரிசைகளில் ஒரே மாதிரியான புத்தகங்களை எல்லா அரங்குகளிலும் பார்ப்பது சலிப்பூட்டும் அனுபவமாக இருந்தது.

இந்தப் புத்தகக்காட்சியிலும் வழக்கமான கழிப்பிடப் பிரச்சினை தொடர்ந்தது. கூட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இருப்பது ஒருபுறம் என்றால், தண்ணீர் இல்லாமல் சுகாதாரக்கேடுக்கு வழிவகுக்கும்படி இருந்தது. இது நிச்சயம் களையப்பட வேண்டும். அடுத்த முறை நவீன வசதிகளை மேற்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும்.

ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வைத்திருக்கும் அரங்குகளும்கூட நெட்வொர்க் சரியாகக் கிடைக்காததால் கணிசமான அளவில் புத்தக விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், அட்டையை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் தேய்த்துக்கொண்டு பல நிமிடங்கள் காத்திருப்பதால் தேவையில்லாத மனவுளைச்சலுக்கு ஆளாவதாகவும் வருத்தம் தெரிவித்தார்கள்.

காபி, தேநீர், சாப்பாடு, நொறுக்குத் தீனிகளை மிக அதிக அநியாய விலையில் விற்கும் அவலம் இந்த ஆண்டும் தொடர்ந்தது.

=========================================================================================================
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்



தமிழறிஞர்கள்

அ.கா.பெருமாள்

காலச்சுவடு வெளியீடு

எங்கே செல்கிறது இந்தியா

டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ்

தமிழில்: செ.நடேசன்

எதிர் வெளியீடு

வால்வெள்ளி

எம்.கோபாலகிருஷ்ணன்

தமிழினி வெளியீடு

மரப்பாலம்

கரன் கார்க்கி

உயிர்மை வெளியீடு

செயலே சிறந்த சொல்

மு.ராஜேந்திரன்

அகநி வெளியீடு

பளிச்
நா மணக்கும் நாலாயிரம்

மை.பா.நாராயணன்

சூரியன் பதிப்பகம்

விலை: ரூ.150

தூய்மையான பக்தியால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடியும் என்பதைச் சொல்லும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கரைந்த மை.பா.நாராயணன், வாழ்வின் நிலையாமை குறித்தும் இந்நூலில் பேசுகிறார்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?
நிரபராதிகளின் காலம்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

தமிழில்: ஜி.கிருஷ்ணமூர்த்தி

க்ரியா வெளியீடு

நாஜிக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு சாமானிய ஜெர்மன் மக்களின் மௌனமும் எப்படி உடந்தையாக இருந்தது என்பதை விவரிக்கிறது இந்நாடகம். பெரும்பான்மைகள் மௌன சாட்சிகளாக இருக்கும் சமகாலத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த நாடகத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘க்ரியா’ பதிப்பகம். வரலாற்றில் எல்லோருமே நியாய விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாடகம்.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்
சிம்பு, நடிகர்

சுஜாதா சிறுகதைகள்

சுஜாதா

ஒரு மனிதன் ஒரு வீடு

ஒரு உலகம்

ஜெயகாந்தன்

பெரியார் வாழ்க்கை வரலாறு

ஆஹா
சாமி.சிதம்பரனார்

படத்தொகுப்பு: கலையும் அழகியலும்

ஜீவா பொன்னுச்சாமி

விலை: ரூ.350

நிழல் - பதியம் பிலிம் அகாடமி வெளியீடு

படத்தொகுப்பு குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம். திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், எடிட்டிங்கில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் புதிய பரிமாணங்களைத் திறந்துகாட்டும்.

எழுதியவர் : (25-Jan-19, 8:58 pm)
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே