காதல் மலர்ந்த நேரம்
தயங்கி நடந்து மெல்ல அமர்ந்து
குழலைக் கோதி மெல்லச் சிரித்தாள்
விழியை சுழற்றி நாக்கை கடித்து
உள்ளம் திறந்து பேசிப் பொழிந்தாள்
நேரம் குறிக்க முடியாத உன் பேச்சு
கோடைக் கால பருவ மழையோ
இன்னும் கேட்க தவித்து நின்றால் நீ
நழுவி செல்லும் மின்னல் இடியோ
தென்றல் வீச காதல் கொண்டு
குதித்து வந்த பூவின் இறகோ
விண்ணில் நீந்தி தாகம் தீர்த்து
இறங்கி வந்த மேகச் சருகோ