ராசா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராசா |
இடம் | : காற்றின் மடியில் |
பிறந்த தேதி | : 11-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 708 |
புள்ளி | : 26 |
உரத்த உலகத்தில் நிசப்தத்தையும் படிப்பவன்
என் மரணத்தின் மறுநாள்
ஞாயிறு குறித்தபடி உதிக்கும்
பறவைகள் சோம்பல் முறிக்கும்
உதிரம் குளிர்ந்து கிடக்கும்
நான் பிறந்த தருணம் போலே
உலகது போல் சுழன்றபடி
பொழு தென்றும்போல் கழிந்து
என்னை மட்டும் விட்டுச் செல்லும்
என் இறக்கும்தேதி அறியாது
கடமைக் கவலைகள் சுமந்து
இன்னொரு விடியலைக் கண்டு
உயிர்தெழிந் தியங்கும் உலகு
காற்றிடம் பெட்ரமூச்சுக்கடன்
உடலை பேணிகாக்கும் சுமை
அற்பமாய் அலைந்த சிந்தை
யாவும் இனி நான் இல்லை
பார்முழுதும் பார்த்தபடி
பார்வை காட்சியானதடி
நான் என்றெதுவும் இல்லை
இன்றுவரை இது விளங்கவில்லை
ஓயாமல் உன் தகிப்பை நான் கடிந்தாலும்
மறவாமல் கிழக்கில் வரும் காதலியே
சோம்பல் மனக்கால்களை கட்டி இழுத்தாலும்
முறைத்தபடி கண்கள் தொடும் பகலவளே
செல்லும் திசையெங்குமொளி காண்பித்து படி
என் செயல்களை மேற்பார்வை இட்டாயடி
நீ வந்து செல்லும் நேரம் என் வானம் நாணுமடி
வேலை வேளை முடிந்ததும் தள்ளி செல்வதேனடி
உன் அழகுத் தங்கை இரவில் மெல்லச் சிரித்தபோதும்
அவள் ஒளியில் கண்ட அழகு நின்முகமே ஆகும்
சுற்றிச் சுற்றிஒடி வரும் சிறுப்புவி நானே
இரவிலும் நீ வருவாய் எனக் காத்திருப்பேனே
கிருமிகளுக்கு அஞ்சி பதைத்த உடல்
இந்த மதில்களின் காட்டில் மாட்டிக்கொண்டது
உடைந்த மேசையும் ஒட்டடைத் தூசியூம்
இன்று தானே பார்வையின் புலன்பட்டது
வீட்டுவேலைகள் விரட்ட அலுவலகம் ஓடி
இன்று வீட்டிலிருந்தே வேலை என்றார் மோடி
பகலில் வேலையின் நெருக்கடிகளும்
அவ்வப்போது எழுப்பிவிடும் கொசுக்கடிகளும்
ஏதும் தெரியாது பறவைகள் என்னைத்தேட
நட்சத்திரங்கள் வெளிவரச் சொல்லித்தூண்ட
பக்கத்துவீட்டுக் காரனின் தும்மல் ஒலிக்க
கதவை அடைத்து வீட்டிற்குள் சென்றேன்
கிருமிகளுக்கு அஞ்சி பதைத்த உடல்இந்த
மதில்களின் காட்டில் மாட்டிக்கொண்டது
உடைந்த மேசையும் ஒட்டடைத் தூசியூம்
இன்று தானே பார்வையின் புலன்பட்டது
வீட்டுவேலைகள் விரட்ட அலுவலகம் ஓடி
இன்று வீட்டிலிருந்தே வேலை என்றார் மோடி
பகலில் வேலையின் நெருக்கடிகளும்
அவ்வப்போது எழுப்பிவிடும் கொசுக்கடிகளும்
ஏதும் தெரியாது பறவைகள் என்னைத்தேட
நட்சத்திரங்கள் வெளிவரச் சொல்லித்தூண்ட
பக்கத்துவீட்டுக் காரனின் தும்மல் ஒலிக்க
கதவை அடைத்து வீட்டிற்குள் சென்றேன்
காலச்செடியின் மலர்கள்
ரசிக்கவோ தேன் ருசிக்கவோ
பிறர்க்கு மாலை தொகுக்கவோ
ஏதும் காண்போரின்றி கருகவோ
பல நாள் கேள்வி விடை இன்னும் கிடைக்கவில்லை.இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பதில் கள்ளி பாலை கொண்டு கொன்று இருக்கலாம்.
ஏனோ?
தனிமையாகிறேன்...
மறக்கிறார்களா?
இல்லை
வெறுக்கிறார்களா?
தெரியவில்லை..
இதயமும் எதையும்
அறியவில்லை...
நலமா என்று கேட்டேன்
'ம்' என்று சொன்னார்கள்
ஏனோ??
மீண்டும் என்னிடம் கேட்க
மனமில்லையா?
இல்லை
நேரமில்லையா?
அருகில் நின்று
புன்னகைத்து பேசினேன்
சற்று தள்ளிச் சென்று
'ம்' என்று சொன்னார்கள்...
'ம்' என்ற வார்த்தையை
உனக்காக படைத்தானோ
இறைவன்?
வேறொரு வார்த்தையை
வாய்பேசவில்லையே!!
அலைகடல் போலே
அலைந்தவன் நான்!
குட்டையை போலே
மாறிவிட்டேன்!
பறவையை போலே
பறந்தவன் நான்!
உதிரிலை போலே
உடைந்து நின்றேன்!
வாய்விட்டு நான் பேச
வார்த்தைகள் இருந்தும்
வாயில்லா ஜீவனாய்
தனிமையில் நிற்கிறேன்!!!
கண்ணீர் சிந்தக்கூடாது
எனக் கூறிவிட்டு
நீயே ஏனடா
காயமும் தந்து செல்கிறாய்......