மனக்கதிரவள்
ஓயாமல் உன் தகிப்பை நான் கடிந்தாலும்
மறவாமல் கிழக்கில் வரும் காதலியே
சோம்பல் மனக்கால்களை கட்டி இழுத்தாலும்
முறைத்தபடி கண்கள் தொடும் பகலவளே
செல்லும் திசையெங்குமொளி காண்பித்து படி
என் செயல்களை மேற்பார்வை இட்டாயடி
நீ வந்து செல்லும் நேரம் என் வானம் நாணுமடி
வேலை வேளை முடிந்ததும் தள்ளி செல்வதேனடி
உன் அழகுத் தங்கை இரவில் மெல்லச் சிரித்தபோதும்
அவள் ஒளியில் கண்ட அழகு நின்முகமே ஆகும்
சுற்றிச் சுற்றிஒடி வரும் சிறுப்புவி நானே
இரவிலும் நீ வருவாய் எனக் காத்திருப்பேனே