வணக்கம் நான் குயின்சன். தமிழ் மீது கொண்ட தீராக்காதலால் எழுத்து.காம் வலைத்தளத்தில் நானும் ஒரு அங்கத்தவராக 2014 இல் தொடக்கம் இருந்து வருகின்றேன் . நான் தமிழ் இலக்கண இலக்கியம் பற்றிய பெரிதும் அறிவு அல்லாதவன் ஆனால் தமிழின் தோற்றம் வளர்ச்சி பற்றிய அறிவு ஓரளவு தெரிந்தவன் இன்னும் நிறைய கற்க ஆசைப்படுகிறேன் அதற்கு இந்த வலைத்தளம் உதவும் என நம்புகிறேன் .
வணக்கம் நண்பரே.....
தளத்தின் தலைப்பக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை, ஓவியம்....... இந்த வரிசையில் திருக்குறளுக்கு அடுத்து
"எழுது" என்ற பிரிவு இருக்கிறதல்லவா அதை சொடுக்கி அதில் தங்கள் எழுத முனையும் பிரிவை தேர்ந்தெடுத்து எழுதுங்கள் .
உங்களின் பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறோம்..... 01-Aug-2018 11:15 am
நான் கேட்பதும் அதுவே.....ஆடை நாகரிகத்துடன் பட்டம் பெற்று குடும்ப பாரத்தை பாதி தாம் சுமக்க வேண்டும் என்று பணிக்கு செல்லும் போது......காலையில் பேருந்தை தவறவிட்டால் தாமதமாகி மாத கடைசியில் தன் பணம் பிடிக்கபடும் என்று நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏன் நசுக்கபடுகிறோம் ......கஷ்டபட்டு பாதியில் இறங்கிய நாட்கள் பல.....மற்றும் ஆடையின் அர்தம் அரியா பிஞ்சு குழந்தை என்ன செய்தது....பெண்ணாய் பிறந்து தவறு செய்தது..............
மற்றும் ஒரு தாயாய் இருந்தாலும் இடம் கிடைதால் தவறு புரிவானா??????? 01-Aug-2018 12:15 am
இந்த உலகத்தில் எவ்வளவு விதமான மனிதர்கள் உள்ளார்களோ அவ்வளவு விதமான கயவர்களும் உள்ளனர். பெண்ணை உடல் மூலமாக வீழ்த்த நினைப்பவர்களுக்கு ஒரு பெப்பர் ஸ்பிரேவே போதுமானது. ஆனால் மனம் நோக வதை செய்பவர்களுக்கு எந்த ஸ்பிரேவும் கிடையாது. நான் இரண்டாவது தாக்குதல் முறையை பற்றி தான் பேச விரும்புகிறேன்.
ஆடை, பேச்சு, படிப்பு, பழகுதல் முறையில் துடக்கு எவ்வாறு சிரிக்க வேண்டும் என்பது வரை வழி வழியாக பெண்களுக்கு கரிப்பிக்க பட்டு வந்து இருக்கிறது. ஒரு சமூகத்தில் தன்னை சேர்த்துக்கொள்வதற்கு சில பண்பாட்டை பின்பற்றுதல் வேறு அந்த பெண்ணையே ஒரு பொம்மை போல் ஆக்கி அவள் சுய சிந்தனையை சிதைத்து எதிர்த்து பேசுபவர்களையும் நிராகரிக்க படுவது தான் இங்கே அதிகம். இதை பெண்கள் உணர்ந்து, எதிர்த்து குரல் கொடுத்தால் தான் விமோச்சனம் என்பதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியும். இந்த காலத்து பெண்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஆனாலும் சுய சிந்தனையின் தட்டுப்படை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் சம்பாதிக்க தான் புத்தகம் படிக்கிறார்கள், எனவே அதற்கு மற்றும் அது உதவுகிறது. பிற நூல்களும் இல்லக்கியங்களும் படித்தால் இன்னும் எவ்வளவோ சிறந்த சிந்தனையாளர்கள் இங்க பிறந்தும் உணராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய கரணம் என்று நான் நினைக்கிறன். 31-Jul-2018 7:32 am
பெண்ணானவள் இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகரானவளாக தான் காணப்படுகின்றாள் எனவே அவளுக்கு ஆண்களை பற்றியும் தெரியும் பெண்களை பற்றியும் தெரியும். அவளுக்கு கயவர்கள் ஆணைகளாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை சில பெண்களும் இருக்கலாம் . அப்படி ஆண்களால் காம இச்சையின் காரணமாக தாக்கப்படுவதாயின் அதற்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்திலேயே அவள் தாக்கப்படுவாள் அப்படியாயின் ஏன் அவள் அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொள்ள வேண்டும் . அதாவது பெண் என்பவள் ஆடை ஒழுக்கத்தை கடைப்பிடித்தல் தகுந்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்லல் , அதிக ஆண் நண்பர்கள் மற்றும் தெரியாதவர்களின் பழக்கத்தை குறைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில தீய நடத்தை கொண்ட பெண்களை இனம் கண்டு அவர்களிடம் இருந்து விலகுதல் , யாரும் அற்ற இடங்களில் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் , போதையில் இருக்கும் ஆடவர்களை கண்டால் அவ்விடத்தை விட்டு செல்லல் மற்றும் எப்பொழுதும் புதிய இடங்களுக்கு செல்லும் பொது வீட்டில் உள்ளவர்களை அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து செல்லுதல் என்பன மூலம் ஒரு பெண் தன்னை பாதுகாத்து கொள்ளலாம் .
(இன்னும் நீங்கள் எதிர் பார்த்த விடை கிடைக்கவிட்டால் மேலும் கேள்விகளை தொடுக்கலாம் நன்றி இப்படிக்கு குயின்சன் யாழ்ப்பாணம் ) 30-Jul-2018 1:52 am