என் மரணத்தின் மறுநாள்

என் மரணத்தின் மறுநாள்
ஞாயிறு குறித்தபடி உதிக்கும்
பறவைகள் சோம்பல் முறிக்கும்
உதிரம் குளிர்ந்து கிடக்கும் 

நான் பிறந்த தருணம் போலே 
உலகது போல் சுழன்றபடி 
பொழு தென்றும்போல் கழிந்து 
என்னை மட்டும் விட்டுச் செல்லும்

என் இறக்கும்தேதி  அறியாது
  கடமைக் கவலைகள் சுமந்து
இன்னொரு விடியலைக் கண்டு
 உயிர்தெழிந் தியங்கும் உலகு 

காற்றிடம் பெட்ரமூச்சுக்கடன்
 உடலை பேணிகாக்கும் சுமை 
அற்பமாய் அலைந்த சிந்தை
யாவும் இனி நான் இல்லை 

பார்முழுதும் பார்த்தபடி 
பார்வை காட்சியானதடி
நான் என்றெதுவும் இல்லை 
இன்றுவரை இது விளங்கவில்லை

எழுதியவர் : ரா.சா (4-Oct-20, 11:00 am)
சேர்த்தது : ராசா
பார்வை : 720

மேலே