அந்த மூன்று நிமிடம்

அந்த மூன்று நிமிடம்

அண்டம் என்ற
இந்த பிரபஞ்சத்தில்
பூமி என்பது ஒரு சின்ன தூசி.
இதை சுற்றி இருப்பது
பிரம்மாண்டமான கோள்கள்.
கோடிகணக்கான நட்சத்திரங்கள்.
எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். உடலால் அளக்க முடியாதது.
மனதால் கற்பனை செய்ய முடியாதது. மனிதனுடைய அறிவு அத்தனை எல்லைகளுக்கும் போன பிறகும் கூட எதைத் தெரிந்து கொள்ள முடியாதோ அதுதான் அண்டம்.
நாம் இருக்கிற சூரிய குடும்பம்
இதனை சுற்றி ஆயிரக்கணக்கான
சூரிய குடும்பம் கொண்டது தான் பால்வீதி என்கிற கேலக்ஸி.
பத்தாயிரத்துக்கும் மேலான கேலக்சிகள்  இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது.
எத்தனை விண்மீன்கள்
கோடிக்கணக்கான கோள்கள்
காலக்ஸிகள் நெபுலாக்கள்
கரும் பள்ளங்கள் இத்தனையும் அடங்கிய இந்த பிரமாண்டமான பிரபஞ்சம் இருக்கிறதல்லவா
அதுதான் மனிதன் பார்க்கக்கூடிய எல்லா அதிசயங்களின் பேரதிசயம்.
எவ்வளவு பிரமாண்டம்.
கற்பனையே செய்ய முடியாத
அளவுக்கு பிரமாண்டம்.
அதுதான் நம்முடைய அண்டம்.

இதற்கு தமிழில் அழகான பெயர்கள் உண்டு 'புவனம்' என்ற பெயர் உண்டு
'விரி' என்று சொன்னான்.
'வெளி' என்று சொன்னான்.

பாரதி கூறினான்.
"வானில் பறக்கும் புள்ளெலாம் நான். மண்ணில் திரியும் விளங்கலாம் நான். கானில் வளரும் மரம் எல்லாம் நான். காற்றும் புனலும் கடலும் நான். வெட்டவெளியில் விரிவெல்லாம் நான். அண்டங்கள் அனைத்தும் ஆக்கினோன் நான்"

பிரபஞ்சம் எப்போது உருவானது.
பிக்பேங்க் (big bang) பற்றி அறிந்திருப்போம்.
பெரும் வெடிப்பு ஒன்று நிகழ்ந்தது.
உடனே இந்த பிரபஞ்சம் உருவானது.
1500 கோடிக்கு வருஷம் முன் இந்த பிரபஞ்சம் உருவானது.
சரி இந்த பிரபஞ்சம் உருவாக எத்தனை ஆண்டு ஆனது.
நண்பர்களே! ஆண்டும் அல்ல
நாட்கள் மெல்ல சொன்னால் வியந்து விடுவீர்கள் வெறும் 3 நிமிடங்களில் உருவானதே இந்த 7000 கோடி ஒளி ஆண்டுகள் விட்டம் உள்ள
மிக பிரமாண்டமான பிரபஞ்சம்.
சரி பெறு வெடிபுக்கு முன் என்ன இருந்தது.
மெய்ஞானம் கேட்கும் இந்த கேள்விக்கு
விஞ்ஞானத்திடம் பதில் இல்லை.
விஞ்ஞானம் கைகூப்பி சொன்னது
ஒரு வேளை அது தான் கடவுளாக இருக்குமோ.

- பாலு.

எழுதியவர் : பாலு (3-Oct-20, 8:33 pm)
சேர்த்தது : balu
பார்வை : 235

மேலே