தனிமையில் நிற்கிறேன்
ஏனோ?
தனிமையாகிறேன்...
மறக்கிறார்களா?
இல்லை
வெறுக்கிறார்களா?
தெரியவில்லை..
இதயமும் எதையும்
அறியவில்லை...
நலமா என்று கேட்டேன்
'ம்' என்று சொன்னார்கள்
ஏனோ??
மீண்டும் என்னிடம் கேட்க
மனமில்லையா?
இல்லை
நேரமில்லையா?
அருகில் நின்று
புன்னகைத்து பேசினேன்
சற்று தள்ளிச் சென்று
'ம்' என்று சொன்னார்கள்...
'ம்' என்ற வார்த்தையை
உனக்காக படைத்தானோ
இறைவன்?
வேறொரு வார்த்தையை
வாய்பேசவில்லையே!!
அலைகடல் போலே
அலைந்தவன் நான்!
குட்டையை போலே
மாறிவிட்டேன்!
பறவையை போலே
பறந்தவன் நான்!
உதிரிலை போலே
உடைந்து நின்றேன்!
வாய்விட்டு நான் பேச
வார்த்தைகள் இருந்தும்
வாயில்லா ஜீவனாய்
தனிமையில் நிற்கிறேன்!!!