வீட்டைத்தாண்டி வருவாயா 

கிருமிகளுக்கு அஞ்சி பதைத்த உடல்இந்த
மதில்களின் காட்டில் மாட்டிக்கொண்டது 

உடைந்த மேசையும் ஒட்டடைத் தூசியூம்
இன்று தானே பார்வையின் புலன்பட்டது

வீட்டுவேலைகள் விரட்ட அலுவலகம் ஓடி 
இன்று வீட்டிலிருந்தே வேலை என்றார் மோடி  

பகலில் வேலையின் நெருக்கடிகளும் 
அவ்வப்போது எழுப்பிவிடும் கொசுக்கடிகளும்  

ஏதும் தெரியாது பறவைகள் என்னைத்தேட 
நட்சத்திரங்கள் வெளிவரச் சொல்லித்தூண்ட 

பக்கத்துவீட்டுக் காரனின் தும்மல் ஒலிக்க
கதவை அடைத்து வீட்டிற்குள் சென்றேன் 

எழுதியவர் : ரா.சா (27-Mar-20, 8:02 am)
சேர்த்தது : ராசா
பார்வை : 600

சிறந்த நகைச்சுவைகள்

மேலே