புரிதலின்மை

என் வீட்டில் நேற்று மின்விசிறியின் காயில் பழுதடைந்தது.
இன்று காலை டியூப் லைட் பியூஸ் போனது.
நான் இரண்டையும் இன்று சரி செய்துவிட்டு கடைவீதிக்கு சென்று வீடு திரும்பினேன்.
அப்போது என் அம்மா மின் விசிறியையும் டியூப் லைட்டையும் சர்ஜிக்கல் ஸ்பிரிட் துணியில் நனைத்து துடைத்து கொண்டிருந்தார்கள் . என்னம்மா பண்ணிக்கிட்ருக்க என்று கேட்க அம்மா சொன்னார்கள் என்னிடம் 'உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா இந்த கோரோனோ வைரஸ் மறுபடியும் இந்த லைட்டையும் காத்தடியையும் நாசம் பன்னிட்டு போய்டும் அதான் தொடச்சி வைக்கிறேன், இன்னும் கிரைண்டரு மிக்ஸி தொடக்க வேண்டியிருக்கு ' என்றார்கள் .
அடப்பாவமே கோரோனோ பீதியில் எங்கம்மா இந்த அளவுக்கு இறங்கி பயந்து கடக்குறாங்களே அப்படின்னா நம்ம அம்மா மாதிரி உள்ள எத்தனையோ மக்களுக்கு கோரோனோ என்னவெல்லாம் பயமுறுத்தி வச்சுருக்கோ தெரியல்னு நெனச்சுக்கிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றேன்.

எழுதியவர் : (20-Mar-20, 7:38 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 166

மேலே