இருபத்தைந்தில் இல்வாழ்க்கை

ஆழ்மனதின் அமைதியை நீ
அணுவளவேணும் சிதையச் செய்தால்
அறிவு சிதையும் நிலை வந்து
ஆற்றல் இல்லா உடலாகி
கேடுகள் பல வந்து சேரும் !

பாடுபட உடலை நீ
பழக்கப் படுத்தவில்லை எனில்
பட்ட மரம் போல் கெட்டுப் போய்
பாதி வாழ்வில் பரிதாபப்பட்டு
பல கஷ்டம் பட நேரும் !

இருபத்தைந்தில் இல்வாழ்க்கைக் கண்டு
இலக்கணமான வாழ்வை ஏற்றால்
இல்லம் நல்ல இடமாய் மாறி
பள்ளம் மேடு எது வந்த போதும்
பாதுகாப்பாய் நீயும் வாழக்கூடும் !

இளமையில் நீயும் சுகத்துக்கு
இடந்தனை அளித்தால்
இயலா நிலையில் புயல் போல் துன்பம்
இடப்புறம் வலப்புறம் என இருபுறம் வந்து
இம்சித்து நம்மை இருட்டடிப்பு செய்யும் !

பதமாய் நாமும் வாழ்க்கை பயணத்தில்
பதறாமல் பாயாமல் பார்த்து சென்று
பயனோடு சிறந்த வாழ்முறை கண்டு
பலசாலிப் போல பம்மாத்து செய்து
பரம்பொருளின் பாதத்தில் பணி நிறைவு செய்வோம்!
––– நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-Feb-19, 3:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 84

மேலே