பிழை செய்ய தோணுதடி

சிதறுதடி அழகு குழல் உன் சிரசின் மேலிருந்து
ஒற்றை குழல் ஒன்று ஒளிர்கின்ற கன்னத்திலே
கருமை நிற மச்சம் ஒன்று காட்டுதடி அழகைக் கூட்டி
கருவிழி கண்களிரண்டும் கனிந்த பனை போலே
நாசி மேல் அழகு சொர்ணம் நாட்டியம் ஆடுதடி
தாலி வாங்கும் நீள் கழுத்தோ தக தகவென தந்தம் போலே
மழலையின் இரைப்பையோ மார்பு என ஆனதோடி
உடையாமல் பார்த்துக் கொள் மெல்லிய இடைதனையே
மத்தளம் போலே தான் குத்த வைக்கும் குமிழ்ரெண்டும்
பிழை செய்ய தோணுதடி வாழைத்தண்டு காலைப் பார்த்து
பேராற்றல் மிக்கவன் நான் இன்று - பெரிதும்
சிதைந்து போனேன் உன் பெரிய எழிலைக் கண்டு .
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (5-Feb-19, 9:15 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 255

மேலே