தன்நம்பிக்கை

நதிகள்
பள்ளத்தைப் பார்த்து பயப்படுவதில்லை
அதை
நிரப்பி விட்டு
நின்று விடுவதில்லை
ஓடிக்கொண்டேயிருக்கும்
கடலில் கலந்தாலும்
கண்கள் மூடாது
அலையாகி
கறையேற போராடும்

அடிமையான அம்பு
வில்லிடமிருந்து விடைப்பெற்றதும்
அதன்
வேகம் காட்டும்
போரில் வீரனையும்
நீரில் மீனையும்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
வீழ்த்தி காட்டும்

தவறி விழுந்தாலும் மரணம்தான்
ஆனாலும்
தன்நம்பிக்கையோடு
கூடுக்கட்டும்
கிணற்றின் மேலுள்ள கிளையில்
பறவைகள்

தூரம் என்று
எந்தப் பறவையும்
சொல்வதில்லை
மழை வந்தாலும் மற்ற
கூடுகளுக்கு செல்வதில்லை
பெரியது உலகு
அதைவிட பெரியது
பறவையின் இறகு

ஓய்வெடுக்கும் எறும்பை
ஒருப்போதும் பார்க்க இயலாது
இல்லாத வயிற்றுக்கும்
சுறுசுறுப்போடு
இரைத்தேடிக்கொண்டேயிருக்கும்
த ன் எடையை விட
கூடுதலாக சுமக்கும்

வாழமுடியவில்லை என்று
சிலர்
கயிறுக்கட்டி
தூக்கில் தொங்கி விடுகிறார்கள்
வாழ்ந்தாக வேண்டுமென்று
சிலர்
கயிறுக்கட்டி
அதன்மேலே நடக்கிறார்கள்

போராடி பார்ப்பவனும்
போராடி தோற்பவனும்
போராடி வென்றவனும்
மூவ்வருமே
வீரர்கள்தான்

சாமியும் சாத்தானும் வேறில்லை
இவைதான்
உன் பலமும் பலவீனம்
இவ்விரண்டும்தான்.

எழுதியவர் : கு.மோகன் குப்பையன் கொட்டா (10-Feb-19, 8:00 am)
பார்வை : 5303

மேலே