குறை நிறை நிறை குறை

குறை நிறை நிறை குறை
**********************************************

குறையின்றி ஏதுமிலை நிறைவானது ஒன்றுமில்லை
குறையற்ற மனிதருள்ளும் நிறைகாணா ஒன்றுண்டு
நிறைவேறும் எண்ணங்களும் குறைகாண ஏதுவாகும்
நிறைந்து நிற்பதுவே குறைகாணும் தத்துவங்கள்
குறைபேசும் நபர்களிடை குறையுண்டு சத்தியமே
குறைபேசா நிறைவாளர் குறையின்றி வாழ்வாரே
நிறைகண்டு நிற்போரும் குறைகண்டு நிமிர்ந்தோரே
குறைகாணா ஆக்கங்கள் நிறைவேற்ற யாருண்டு
நிறைவேறா திட்டங்கள் குறைவின்றி இருப்பதுவே
நிறைவேறும் குறைகளதும் குறைவின்றி நிறைவேறும்
குறையேது நிறையேது குறையில்லா நிறையேது
குறை வேறு நிறை வேறு குறைகாணும் நிறை வேறு
நிறை வேரில் குறை ஏற குறைவாரே நிறைவாளர் !

நிறை குறை குறை நிறை குறை குறை நிறை நிறை
குறை குறை நிறை நிறை நிறை நிறை இறை நிறை

( இறுதி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க
சொல்லுக்கேற்ற பொருள் விளக்கம் கொள்ளலாம் )

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Feb-19, 11:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 83

மேலே