பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 3 சுலோகம் 5 6 7

5 .
நிர்குண நிட்டைக்குத் தேவை பெருமுயற்சி
நிர்குண நிட்டை உடலபிமா னிக்குபெருங்
கட்டத்திற் குப்பின்வாய்க் கும் !
6 .
என்னையே எண்ணியுபா சித்துவே றேதேனும்
அன்னிய சிந்தனை யின்றி செயல்களை
என்னிடத்தில் ஒப்புவிப்போ னை
7 .
அவ்வாறு என்னிலே சிந்தை செலுத்தியோனை
பார்த்தாநான் சாவுசேர்சம் சாரக் கடலின்று
காப்பாற் றியவனா வேன் !

----கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-19, 4:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே