காதல்

ஒவ்வொரு வார்த்தையும்
பேசி முடிக்கையில்
உதட்டில் உறையும்
உன் புன்னகை

ஒவ்வொரு சிரிப்பும்
சிரிப்பின் முடிவிலும்
லேசாய்த் துடித்து நிற்கும்
உன் மீசைமுடி

ஒவ்வொரு கோபமும்
அதன் முடிவிலும்
சிவந்து நிறக்கும்
உன் காதுமடல்

ஒவ்வொரு பார்வையும்
அதன் மறைவில்
மின்னும்அக்கறையில்
உன் அன்பு

ஒவ்வொரு விவாதம்
அதன் வெற்றியில்
அழகாய் நெறிபடும்
உன் புருவம்

அத்தனைக்கும்
நான்
அடிமை


அகிலா

எழுதியவர் : அகிலா (2-Mar-19, 10:45 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 252

மேலே