கள்வனின் காதலி
பூத்து குலுங்கும்
வண்ணமலர்கள்
சேர்த்து கோர்த்த
மாலையாய்
பார்த்ததும் ஈர்த்த
பளிங்கு சிலை
அவளை
கன்னக்கோல்
இன்றி
களவெடுத்து என்
சிந்தையிலே சிறை
வைத்து
என்னங்களை காவல்
நிறுத்தி
காதல் உணர்வை
உணவாய் ஊட்ட
அந்த
காதல் மயக்கத்தில்
கவிதையாய் இந்த
கள்வனின் காதலி!

