தேடல்

உன் உணர்வுகளின்
கருத்தாக நான்...
நான் என்றால்
உன் உணர்வா...?
உன் சதையா...?
உன் இரத்தமா...?
உன் மனமா...?
கேள்விகளில் நான்
உருப்பெறாத அருவமாய்...

உன் வார்த்தைகளை
கூர் தீட்டுகின்றாய்...
என்னுடலை ஊடுறுவ...?
வார்த்தை மட்டுமே மிச்சமான
வாசகங்களை என்ன செய்வாய்...?

ஜாலங்களை உணரும்  - உன்
மனம்....
மனச் சஞ்சலங்களை....?

எதிர் பாரா சந்திப்பின்
எச்சமாக நான்...
எதிர் தரப்பில்..
உன் வார்த்தைகளை எதிர்நோக்கி.....

ஊட்டமிகு உன் வார்த்தை
உள்மத்தமாய் என் நெஞ்சில்...
உன்றுகோல் தேடியபடி...?

உன் நெஞ்சம் நானறிய....
என் நெஞ்சம் யார் அறிவார்...
புறக்கணிக்கபட்ட வார்த்தையாய்
ஒரு கவிஞனை தேடி...
அவருக்காவது...
நான் உபயோகமா என்று....?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (3-Mar-19, 8:41 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : thedal
பார்வை : 115

மேலே