இரவு பகல் பாராதிடு

அடியே...
அம்மிக்கல்லில் வைத்த
தேங்காய் சில்லாய்
மனச அழுத்தி அரைக்கிறியே...
தண்ணி குடிக்க வரும்
விக்கலில் கூட உன்
நினைப்ப தோண வைக்கிறியே...

புன்னகை ஒன்றுக்கு
தானே உனை நிழலாய்
பின் தொடர்ந்தேன்...
நீ மின்னலாய் மறைந்து
போனால் உன் அழகு முகம்
என்று நான் காண்பேன்...

அன்பே..
கண் அவன் கணவனென்று
நீ நினைத்தால் என்
கழுத்தில் பூமாலையிடு..
என்னுள்ளம் குளிர வைக்க
என்னோடு கலந்து விடு
இரவு பகல் பாராதிடு...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (5-Mar-19, 8:47 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 147

மேலே