பொள்ளாச்சி கொடூரம்

பொள்ளாச்சி கொடூரம்

மனித நேயம் எங்கே போனது
மிருக தேசம் என்றே ஆனது
அழுகுரல் கேட்டபோதிலும்
அவளை அணைத்திடவா தோணுது
மனித நேயம் எங்கே போனது ??

இரும்பு இதயங்களை உடைத்தெறிய வேண்டும்
இழிவாய் நடந்தவர்களை இனி புதைத்திடவே வேண்டும்
நம் நாடு சுடு காடாய் மாறுது
சுதந்திர பெண்மை என் தேசத்தில் எங்கே வாழுது
மனித நேயம் எங்கே போனது ??

தண்டனைகள் பெருகினால் மட்டுமே
தவறுகளும் குறையுமடா
அண்ணா என்று அழும்போது
தங்கை என்ற பாசம் எங்கே போனது
மனித நேயம் கண்மூடி தூங்குது

மனித நேயம் இல்லையெனில்
தேசம் தேய்ந்துதான் போகும்
அது தலை சாய்த்துதான் சாகும்
மனித நேயம் எங்கே போனது ??

மனித நேயம் இல்லையெனில்
இனி வாருங்கள் எல்லோரும் வண்டலூரில் வாழலாம்

BY ABDUL DGS

எழுதியவர் : (12-Mar-19, 8:26 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 308

மேலே