அந்த கண்கள்
அந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன....
 மூடினாலும் விழி தெரியும் முட்டை கண் அது
 முன் பனி மூடிய ஆப்பிள் முகமது.... 
எங்கோ உயர பறந்திருக்க வேண்டிய பட்டமது....
அதன் தமிழறிவிற்கு எழுத்தாளராகவோ..... 
சொல் வன்மைக்கு வழக்கறிஞர் ஆகவோ.... 
அன்பிற்கு இன்னொரு தெரசா ஆகவோ..... 
கைமணத்திற்கு சமையல் நிபுணர்.... ஆகவோ.... 
ஆகியிருக்கும்..... இக்கணம்
 அது ஒரு அன்பு கூண்டிற்குள்.... 
அது ஒன்றும் சிறை அல்ல அதற்கு..... 
ஆனாலும்....
 விதியின் காற்றில் ஆடுகின்றது இந்த நாணலும்... 
ஆனாலும் 
இந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன...
 
                    

 
                             
                            