அரசியலும் காதலும்
அரசியல்
காதல் இரண்டுமே
வெற்றிக்காக
கொள்கை இழப்பது
பணத்தை
கொள்ளை அடித்தால்
அது அரசியல்
மனத்தைக்
கொள்ளை அடித்தால்
அது காதல்
அரசியலில்
இருகாலி மனிதன்
நாற்காலிக்காக
நாற்காலி விலங்காகிறான்
காதலில்
இரு காலி மனிதன்
இரு காலி பெண்ணுக்காக
ஒரு காலில் நிற்கிறான்
அதில்
பெட்டி பேட்டி
கொடுத்து
கூட்டணி உறுதியாகிறது
இதில்
மெட்டி மாட்டி
கூட்டணி உறுதியாகிறது
அரசியலில்
மக்களிடம்
தொகுதியை
நல்ல வச்சிருப்பேன்
என வாக்கு
கேட்டு கெஞ்சப்படுகிறது
காதலில்
இவளிடம் உன்னை
நல்லா வச்சிருப்பேன்
வாக்கு கொடுத்து
கெஞ்சப்படுகிறது
அரசியலில்
சின்னம் காட்டப்படுகிறது
வாக்களிக்க
காதலில்
கன்னம் காட்டப்படுகிறது
வாய்களிக்க
அங்கே
ஊழல் தெரிந்தால்
மாமியார் வீடு
இங்கே
காதல் தெரிந்தால்
மாமியார் வீடு
இரண்டிலுமே
வெற்றி பெற
காலில் விழுவர்
தேவை
முடிந்ததும்
மக்களும் இவளும்
கழட்டிவிடப்படுவர்