என் இளைய சமூகமே..

எண்ணிரண்டுதான் கடந்து
எட்டு vaitha yearugale..
கண் இரண்டை திறந்து கொண்டு
கனவு காணும் காளைகளே..
காலம் ealam பாடுபட்டு
கடுகளவு சேர்த்துவிட்டு
இயலவில்லை என்றியம்பி
இடிந்து போன இதயங்களே..
சோகம் இங்கே யாருக்கில்லை
சுகதுக்கம் நிரந்தரம் இல்லை..
கவலை வேண்டாம் கண்ணுக்குளே
நீ தேடும் வெளிச்சம் வெளியே இல்லை..
காலம் நேரம் கடந்து செல்லும்..
கனவு ஒன்றே கவர்ந்து கொள்ளும்..
எதிலோ மனம் ஏக்கம் கொள்ளும்..
எதிர்காலம் எண்ணி கவலை கொள்ளும்..
எதிர்த்து நீயும் போராடு
முயற்சி எனும் பேரோடு
அது நெருப்பு கடலே என்றாலும்..
துணிந்து நீயும் போராடு
வெற்றி உன்னை தேடிவரும்
விண்ணும் உனக்கு மாலை இடும்
உனக்குள் இருக்கும் வெளிச்சம் மட்டும்
முயற்சி ஒன்றால் வெளியே வரும்
உனக்கு நீயே ஆணை இடு
முயற்சி கொண்டு சபதமிடு
வெளியே தேடும் வெளிச்சமது
உனக்குள் இருப்பதை உணர்ந்து விடு..
சோகம் இங்கே யாருக்கில்லை
நீ தேடும் வெளிச்சம் வெளியே இல்லை..

எழுதியவர் : (2-Sep-11, 6:27 pm)
பார்வை : 433

மேலே