திக்குமுக்காட வைக்கின்றன
கணித்து அறியும் முன்பே
அணிவகுத்து வருகின்றன
கணக்கில்லா பிரச்சனைகள்
தினத்துக்கு ஒன்று என்று
திணற வைக்கும் கோளாறுகள்
திக்குமுக்காட வைக்கின்றன
அனைத்தையும் எதிர்கொள்ள
அறிவோடும் ஆற்றலும்
அரிதாகவே வாய்க்கின்றது
உள்ளக் குறைகளை நம்மின்
உறவுகளோடு பகிர்ந்து கொண்டால்
எள்ளலும் எகத்தாளமுமாய் எதிரே தாக்குகின்றன
செம்மையாய் நல்வினையை செய்து
சோதனையான எதிர்வினை களைந்து
சாதனை பல செய்தே வாழுங்காலம் கடந்திடுவோம்.
--- நன்னாடன்.