வாக்கு மெய்ப்பட வேண்டும்
ஓர் விரல் கொண்டு
ஒடுக்கும் நேரம்,
ஓயா மாய்க்கும்
வித்தையாளர்களை வீழ்த்துவோம்-அவ்
விரல் கொண்டு!
பிச்சைக்கும் இச்சைக்கும்
பச்சைக் கொடியாட்டும்
பாசங்கு வார்த்தை யாளர்களை
வீழ்த்துவோம் அவ்விரல் கொண்டு!
சூழ்ச்சிக்குள் சூழ்ச்சி
வீழ்ச்சியில் மிரட்ச்சி
திரள் கயவர்களுக்கு திரை
யிடுவோம் அவ்விரல் கொண்டு!
புலர்பொழுதையும் புலப்படா
புரியா புல்லினங்கா
பட்டியலிடும் பாசங்காளர்களுக்கு
பாடமெடுப்போம் அவ்விரல் கொண்டு!
எவ்வெளி யாயினும் அவ்வழி
வாழ்வின் வலி அறினும்
தன்வழி தந்திரக்காரன்களை
தரையாக்குவோம் அவ்விரல் கொண்டு!
விகடதாரி வேசங்கட்டி விஞ்யை
விகாரமாக்கும் வேடதாரிகளை
விரட்டியக்கும் விஷமங்களை
வீழ்த்துவோம் அவ்விரல் கொண்டு!
ஒரு கணம் சிந்திப்போம்
வருமுன் ஒருமுறை நிந்திப்போம்
அவ்விரல் வலிமை உணர்கொள்
உயிர்ப்பிப்போம் !
வாக்கு மெய்பட்ட்டும்!