தொடும்வானம்
தொடும்வானம் தூரமில்லை மாணவர்களே
துணிந்து நின்றாள் தொடுவதிலும் தோல்வியில்லயே
வாருங்கள் எங்களோடு வலம்வரும் உங்களோடு
வெற்றிக்கனி என்றுமே உங்கள் கையிலே !
மெழுகாய் நாங்கள் உருகியே வெளிச்சம் தருகிறோம்
சிறகை விரித்து பறக்கவே ஒன்றுகூடுங்கள்
கல்விஞானம் வேண்டுமா காலம்போற்ற வேண்டுமா
ஞாலத்தை அறிந்திடவே ஞானம் கொள்ளுங்கள்
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்!
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்!
பொதிகைமலை தென்றலாய் பிறந்துவருகிறோம்
புதுபொலிவு கொள்ளவே புறப்படுங்கள்
உலகம் உன்னை போற்றனும் நீ உதவிக்கரம் நீட்டனும்
உன்சொல்லே மந்திரமாய் உலகை ஆளனும்
வேதனை சோதனை சாதனைகள் கொடுக்குமே!
வேதனை சோதனை சாதனைகள் கொடுக்குமே!
மு. ஏழுமலை