உள்ளத்துக்கு மகிழ்வூட்டும்
இறந்தது போல் இருத்தல் வேண்டும்
தொடர் இடர் வரும் காலந்தோறும்
இரந்து தான் வாழ்தல் நிலை வரின்
இம்மி அளவினும் குறையாத உறுதி வேண்டும்
உழைத்தலுக்கு இணையில்லா ஊதியம் பெரின்
உள்ளத்துக்கு மகிழ்வூட்டும் செயலை செய்வோம்
நற்செயலை செய்வோரை உலகம் என்றும்
நலங்கெட எள்ளி நாள்தோறும் வையும்
தொடர்ந்து நீக்கமில்லா தோல்வி வரினும்
அடங்கி அமிழ்ந்திடாத உறுதியுடன் நிற்போம்.
- - -நன்னாடன்