மார்ச் மாதம்

#மார்ச் மாதம்

மார்ச் மாதமே
உனது பிறப்பு 1564 ஆம் ஆண்டாமே
ரோமானியக் கடவுள்
மார்ஸ் நாம மறுவலில்
நீ பெயர் சூட்டிக்கொண்டாயாம்
கூகிள் கூறுகிறது..!

நிறைய மாணவர்களின்
இரவு நேர உறக்கம் கெடுவதும்
நள்ளிரவு வரை விளக்கு ஒளிர்வதும்
உன் வரவால்தான்
மாணவர்களுக்குப்
பரீட்சை வைத்து
ஏன் இப்படி மிரட்டுகிறாய்..!

தொழிலதிபர்களுக்கும்
வாணிபர்களுக்கும்
மண்டைக் காய்ச்சல் அளிக்கிறாய்
நிர்ணயித்த விற்பனையும்
இலாபமும் நீ விடை பெறுகையில்
பாஸா பெயிலா பாணியில்
பலருக்கு இலாபம்
சிலருக்கு நட்டம்..!

தள்ளுபடி விற்பனைகள்
தாராளமாக தந்து போகிறாய்
ஓட்டை உடைசல் கூட
வாழ்வு பெற்றுவிடுகிறது
கணவன்மார்களைத்
திண்டாடச் செய்கிறாய்
கைச் செலவுக்கும் காசில்லா நேரத்தில்..!

சம்பளத்தை மொத்தமாய்
வரியாக வசூலித்துக் கொள்கிறாய்

பிள்ளைகளின் கல்விக் கட்டணத்திற்காய்
கை ஏந்த வைக்கிறாய்..
கடனாளி ஆக்குவதில்
அப்படி என்ன இன்பம் உனக்கு..?

ஆண்டு முழுதும் எழுதிய கணக்கினை
நீதான் நிறைவு செய்கிறாய்
உச்சாணி தொழிலதிபர்களின்
ஐந்தொகை கணக்கில்
கள்ளியாய் ரெட்டை வேடம்
வருமான வரி ஏய்ப்பிற்காமே
என்னமோ போ…
கள்ளக் கணக்கு என்று நீ
கதறவா போகிறாய்..?
கதறினாலும்
கையூட்டால் உன் வாய்க்கு
பூட்டு அல்லவா போடுவார்கள்?

உச்சமான சூரிய வெப்பத்தில்
உஞ்சலாட வருகிறாயா
அல்லது
கயிறுகட்டி கதிரவனை
பூமி நோக்கி இழுக்கிறாயா..?
அப்பப்பா… வெப்பம் தாங்க முடியவில்லை
மின்சார பில்லை
கண்ட மேனிக்கு உயர்த்திவிடுகிறாய்
ஏசி என்ன ஓசியிலா கிடைக்கிறது..?

நல்லதே என்னைப்பற்றி
சொல்வதற்கு இல்லையா..?
இப்படி நீ புலம்புவது
என் செவிக்குக் கேட்கிறது
அவையோரே உங்களுக்குக் கேட்கிறதா..?

சொல்லிடுவோம் நல்லதையும்
மாசி வரை மண விழாக்கள்தான்
விருந்துகள்தான் கொண்டாட்டம்தான்
பங்குனி வந்துவிட்டால்
தேர்த்தான் திருவிழாதான்
தெய்வ தரிசனந்தான்
சேர்ந்து வரும் இறை அருளும்தான்..!

மகிழ்ச்சிதானே என்கிறேன்
மகிழ்ச்சிதான் என்று
குண்டைதூக்கிப்போடுகிறது
தேர்தல் தேதி அறிவிப்பாம்
அடக் கஷ்டமே
இம்முறை ஏமாறுவதாய் இல்லை
என்கிற நம்பிக்கையுடன்
விடைபெறுகிறேன்..

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ. சாந்தி (29-Mar-19, 9:11 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : march maadham
பார்வை : 59

மேலே