சிறுகச் சிறுக சாகட்டும்

பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தையை
நயமாய் பேசி அழைத்த
நாக்குகள் வெட்டப்படவேண்டும்

காடழைக்கும் பாட்டியைக் கூட
கண்டபடி சிதைக்கும்
காமகொடூரன்களின் கைகள்
துண்டாக்கப்பட வேண்டும்

அப்பாவாய் அண்ணனாய்
மாமாவாய் தாத்தாவாய்
இருந்து கொண்டே அத்துமீறி
வன்புணரும் அவனுறுப்புகள்
அறுத்தெறியப்பட வேண்டும்
 
கண்களை மட்டும் விட்டு விடுங்கள்
அவனை காறி உமிழ்வதையும்....
முகம்சுளித்து போவதையும்
ஆயுளுக்கும் பார்க்கட்டும்.....
சிறுகச் சிறுக சாகட்டும்.....

எழுதியவர் : (2-Apr-19, 7:56 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 63

மேலே