காதல்

வளமான குரலோடு சுருதி சேர்ந்தால்
காதிற்கு இதமான சங்கீதம் வாய்ப்பாட்டு,
ஸ்ருதியும் லயமும் சேர்ந்து தட்டாத
தாளம் தந்திடும் கேட்க இனிக்கும் வாத்தியம்,
சுருதி, லயம் ஜதி சேர்ந்தால் அரங்கில்
நாட்டிய மயூரியின் சிருங்கார நடனம் ,
ஒளியோடு ஒளி சேர்ந்தே இனிக்கும்வாழ்வு
கதிரவன் ஒளியில் அதிகாலையில் குயிலின்
கூவும் இசை சேர்வது போல இப்படி
வாழ்வில் ஒவ்வும் ஒவ்வொன்றும் சேர்ந்தால்
எல்லாம் இன்பமயம் ….பெண்ணே என்னோடு
என் காதல் கோரிக்கை ஏற்று நீ சேர்ந்தால்
இசைத்திடுமே நம் காதல் ஒலித்திடுமே
நாதஸ்வரமாய் பரதமும் ஆடிடுமே இசைவாய்
நாம் ஒளியோடு ஒலியாய் வாழ்நாளெல்லாம்
சுகம்பெற வாழ்ந்திடவே காமனும் ரதியுமாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Apr-19, 3:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 206

மேலே