உன்னை நினைக்க மறந்ததில்லையடி 555
என்னுயிரே...
உள்ளூரில் நீயும் அயல்
நாட்டில் நானும் இருக்க...
என் நினைப்பு உனக்கு
வருமா என்கிறாய்...
நான் எப்போதும்
சுவாசிக்க மறந்ததில்லையடி...
அதுபோல்தான்
உன்னையும்...
கடல்கடந்து
நான்
இருந்தாலும்...
உன் வலது கண்ணும்
என் இடது கண்ணும்...
சந்திக்கும் நாள்
வெகுதொலைவில் இல்லையடி...
உன் இதழ்களுக்கும்
இதயத்திற்கும் சொல்லிவை...
உன்னை என் மடியில்
வைத்து கொஞ்சும் நாள்...
தொலைவில்
இல்லை என்று...
கடல் கடந்து நான்
இருந்தாலும்...
என் கண்மணியே உன்னை
நினைக்காமல் நான் இருந்ததில்லையடி.....