மாற்றி யோசி
மாற்றி யோசி
மணம் தருவது மலரின் குணம்
மதுவை பிரித்து தருவது வண்டின் திறம்
பால் சுறந்து கொடுப்பது பசுவின் குணம்
பண்டங்களை பதுக்கி தந்தது பாலின் அகம்
களத்திற்கு ஒளித்தருவது கதிரவனின் குணம்
கருமேங்கள் சூழுச்செய்வது காலத்தின் குணம்
அதை காலத்தே நீர் ஆக்குவது காற்றின் குணம்
மண்வளத்தை பெருக்குவது மழையின் குணம்
அந்த மழை வளத்தை பெருக்குவது மரத்தின் குணம்
மனிதனுக்கு மட்டும் ஏன் அதை வெட்டும் குணம்
இயற்கைக்கு இயல்பாய் அமைந்த பொதுநலம்
இடையில் வாழும் நமக்கு மட்டும் ஏன் சுயநலம்
இதை மாற்றி யோசித்தால் பெருகும் நிலவளம்
சங்கர் சேதுராமன்