SANKAR - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SANKAR |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 20 |
சொர்க்கம்
இல்லாதது எது
இயற்கையிலே
இதற்குமேல் ஒரு
சொர்க்கமா வானிலே
பாகற்காயும் கொடியிலே
பச்சைமிளகாயும் செடியிலே
பலாக்கனியும் மரத்திலே
பல்சுவை கண்டோம் படைப்பிலே
பன்னீர் போல் தெளித்தது சில துளிகளே
பலவகை உண்டு பாரிலே
பக்கங்களில் அடங்கா பட்டியலே
பகுத்தறிந்தால் உணர்வாய்
சொர்க்கம் உன் பாதத்திலே
சங்கர் சேதுராமன்
பாவிகள் பாதை
பெண்னே
என்னை காதலி
காதல் கடிதம்
கையில் இல்லை
மறுத்தால்
அமிலம் உள்ளது
அபிஷேகம் செய்ய
ஆயுதமும் உள்ளது
உன்
ஆருயிர் நீக்க
ஆறு வயது
அரும்பை சுற்றி
அனக்கொண்டாக்கள்
அதுவும்
அறுபதை கடந்த
அனக்கொண்டாக்களும்
அதில் அடக்கம்
அச்சம் மிகுந்த பாதை
அமேசான் வனப்பாதை
பசுமை புடவையை
சுற்றியிருக்கும்
பொள்ளாச்சி
புடவையை களையும்
துச்சாதனர்கள்
புகலிடமாய் போனது
பொள்ளாச்சி
பத்து மாதம் சுமந்தேன்
பாரம் தெரியவில்லை
அது
சுகமான பாரம்
பாவிகள் நிறைந்த
பாதையில் நீ
பயணிக்க போவதை
பார்க்க முடியாமல்
பர்வத பாரமடி என்
இதயத்தில்
சங்கர் சேதுராமன்
வாழை
பட்டையும்,இலையும்
பந்திக்கு உதவும்
பவள நிறப்பூவும்
கூட்டில் சுவைக்கும்
பச்சை நிறக்காயும்
பல்சுவையை கூட்டும்
பால் போல் தண்டும்
கல் சுமையை நீக்கும்
பழத்த நின்ற கனியும்
பசியை போக்கும்
பக்கவாட்டு நார் இழை
பல மலர்களை கோர்க்கும்
பாகமெல்லாம் பகிர்ந்தளித்த பாரியாகும்
படைத்தவன் நமக்கு அளித்த
பரிசாகும்
வம்சத்தின் வரிசைதனை
வார்த்தையில் சொல்லும்
" வாழையடி வாழை " என
வழக்கத்தில் நிற்கும்
வாசலில் வளைந்து நின்று
வாழ்த்து சொல்லும்.
சங்கர் சேதுராமன்
மனித உடல் பாதிக்கப்படின்
மனங்கலங்கும் மனிதா
புனித மரம் சிதைக்கிறாயே
புரியுமா அதன் வலி உனக்கு.
ஆற்றின் அழகு குலைத்தாய்
பூமி பிளந்து ஆழத்தோண்டினாய்
பாறையை உடைத்துத் தூளாக்கினாய்
குளிரை ஆக்கி காற்றை சிதைத்தாய்
உதவாத உடல் கொண்டு
உறுதியானவற்றை எல்லாம் அழித்து
உனக்காக மாற்றிக் கொண்டாயே
உலகம் உனக்கு மட்டுமா சொந்தம் வந்தேறியே !
--- நன்னாடன்
என் காதல்
வண்ணம் உணர்ந்தேன்
வாசம் உணர்ந்தேன்
வண்டாக காத்திருந்தேன் வாசலில்
பூக்கதவு திறக்கவேயில்லை
சங்கர் சேதுராமன்
புத்தனின் கருத்தை
பார்வையால் சொல்லி
போதித்துச் சென்றாயே என்
இதயத்துக் கள்ளி.
செக்கச் சிவந்த உன்
கன்னத்தைக் கிள்ளி
காதலால் மகிழவேண்டும்
மனதால் துள்ளி .
பவழமும் முத்தும் தன்னை
பாதுகாக்க எண்ணி உன்
பல்லாய் வாயாய்
மாறியதோ கன்னி.
--- நன்னாடன்.
முத்தும் எடுப்பேன்
கவிதை என்னும் கழனியில்
எண்ணம் ஏனும் ஏரில்
கருத்து,கற்பனை
காளைகளை பூட்டி
உழத்தொடங்கியிருக்கிறேன்
வித்தை எனும் விதை ஊனி
நன்பொருள் நாத்துவிட்டு
நற்புறமும் பிடிங்கி நட்டு
கசடுகளை களை பரித்து
கதிர் முற்றும்
காலத்திற்காக
காத்திருக்கிறேன்
சொற்கூட்டும்,பொருட்கூட்டும்
எண்ண ஓட்டங்களில் வந்தாலும்
சோதனை ஓட்டங்களாக கருதுகிறேன்
தமிழ்கடலின் கரையோரத்தில் நீந்தி கொண்டிருக்கிறேன்
ஆழ்கடலுக்கு போகச்சொல்லி
அறிவுரைக்கப்பட்டேன்
என் ஆக்கப்பணிக்கு
உங்கள் ஊக்கப்பணி
உடன் இருக்கும் போது
ஆழ்கடல் போவதென்ன
அதில் முழ்கி முத்தும் எடுப்பேன்.
சங்கர் சேதுராமன்
அவன்
விதைப்பது விதை
இவன்
விதைப்பது கவிதை
அவன்
படைப்பிற்கு மகசூல்
இல்லை
இவன் படைப்பிற்கு
வசூல் இல்லை
அவன்
நெல்லை அறுவடை
செய்பவன்
இவன்
சொல்லை அறுவடை
செய்பவன்
இருவருமே
அறுவடை செய்து
நல்ல விலையின்றி
வாடுபவர்கள்
அவனுக்குத் தேவை
எருது
இவனுக்குத் தேவை
விருது
அவன்
பூக்களைப் படைப்பவன்
இவன்
பாக்களைப் படைப்பவன்
அவன்
உழுதுண்டு வாழ்பவன்
இவன்
எழுதியுண்டு வாழ்பவன்
அவன்
களை எடுப்பவன்
இவன்
கலை வடிப்பவன்
அவனுக்கும்
வரிவிலக்கு இல்லை
இவனுக்கும்
வரி விலக்கு இல்லை
அவன்
தன்னைப் பேணாமையைப்
பேசுகிறான்
இவன்
தன் பேனா
மையால் பேசுகிறான்
அவன்
இந்தியாவ