எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீசை வெள்ளிமுடிகள் வெளிச்சம் காட்ட களை எடுப்புகளை கையாண்டேன்...

மீசை

வெள்ளிமுடிகள்
வெளிச்சம் காட்ட
களை எடுப்புகளை
கையாண்டேன்
கருமை கட்சியிலிருந்து
அனைவரும் தாவினர்
வெண்மை கட்சிக்கு
கத்தரிக்கோல் வேலையில்
களைத்து போனேன்
களை பயிர்கள்
கழனி முழுவதும்
களைகளை
கதிராக்கும்
கரு "மை" வித்தைக்கு என்
கருத்து உடன்படவில்லை
கலப்பையான கத்தி கொண்டு
களைகள் விலக்க
முனைந்த போதுதான்
கண்டுக்கொண்டேன்
கைப்பிடித்தவளுக்கு
கடுகு அளவுக்கூட
உடன்பாடு இல்லை என்று
களையெடுக்கும்
முற்படும் போதல்லாம்
கடுகு வெடிக்கும் அவள் முகத்தில்
ஆசைக்காதலுக்கு
மீசையும் ஒரு காரணமோ!!
அலுத்து விட்டாளோ
அவள் முகத்தில் கடுகு வெடிப்பதில்லை
ஆனாலும் எனக்கு இன்னும்
அச்சம்தான்
அறுவடை செய்யும் போது

சேதுராமன் சங்கர்

பதிவு : SANKAR
நாள் : 1-Apr-19, 1:59 pm

மேலே