வாழை

வாழை

பட்டையும்,இலையும்
பந்திக்கு உதவும்
பவள நிறப்பூவும்
கூட்டில் சுவைக்கும்
பச்சை நிறக்காயும்
பல்சுவையை கூட்டும்
பால் போல் தண்டும்
கல் சுமையை நீக்கும்
பழத்த நின்ற கனியும்
பசியை போக்கும்
பக்கவாட்டு நார் இழை
பல மலர்களை கோர்க்கும்
பாகமெல்லாம் பகிர்ந்தளித்த பாரியாகும்
படைத்தவன் நமக்கு அளித்த
பரிசாகும்
வம்சத்தின் வரிசைதனை
வார்த்தையில் சொல்லும்
" வாழையடி வாழை " என
வழக்கத்தில் நிற்கும்
வாசலில் வளைந்து நின்று
வாழ்த்து சொல்லும்.

சங்கர் சேதுராமன்

எழுதியவர் : SANKAR SETHURAMAN (19-Apr-19, 1:54 pm)
சேர்த்தது : SANKAR
Tanglish : vaalai
பார்வை : 41

மேலே