பாவிகள் பாதை
பாவிகள் பாதை
பெண்னே
என்னை காதலி
காதல் கடிதம்
கையில் இல்லை
மறுத்தால்
அமிலம் உள்ளது
அபிஷேகம் செய்ய
ஆயுதமும் உள்ளது
உன்
ஆருயிர் நீக்க
ஆறு வயது
அரும்பை சுற்றி
அனக்கொண்டாக்கள்
அதுவும்
அறுபதை கடந்த
அனக்கொண்டாக்களும்
அதில் அடக்கம்
அச்சம் மிகுந்த பாதை
அமேசான் வனப்பாதை
பசுமை புடவையை
சுற்றியிருக்கும்
பொள்ளாச்சி
புடவையை களையும்
துச்சாதனர்கள்
புகலிடமாய் போனது
பொள்ளாச்சி
பத்து மாதம் சுமந்தேன்
பாரம் தெரியவில்லை
அது
சுகமான பாரம்
பாவிகள் நிறைந்த
பாதையில் நீ
பயணிக்க போவதை
பார்க்க முடியாமல்
பர்வத பாரமடி என்
இதயத்தில்
சங்கர் சேதுராமன்