தாடி மச்சானே

தாடி மச்சான் வாரும்.
என் கதையைக் கேளும்.
தாவணிப் பொண்ணுக்கு
சேலை ஒன்று தாரும். ...///


பட்டு உடுத்து பக்கம்
வர வேணும் நானும்.
என்னைப் பாடாய்ப்
படுத்த வேணும் நீயும்.....///


பட்டுச் சேலை கசங்க வேணும்.
சூடிய பூவும் உதிர வேணும்.
கல கலக்கும்
வளையல் மாட்ட வேணும் உறவும்.....///


குலப்பெருமை பேச வேணும்
ஊரும் தினம் முறைப்போடு
கர கர புறு புறு என இருக்கும்
வெட்டி மாமியாரும் தாலாட்டு
ஒன்று பாட வேணும் .....///

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (23-Jul-19, 4:50 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : thaati machane
பார்வை : 62

மேலே