கண்ணீர் 1

என் சுரப்பிகள்
எனும் சுரபியிலிருந்து
வற்றாது சுரக்கும்
அமுதம் கண்ணீர்

மேகமழை
பொழிந்து வருவதில்லை இந்நீர்
சோகமழை தாக்கி என்
தேகமழை பொழிவால்
வரும் செந்நீர்

என் கண்களை
ஆயுட்கால குத்தகைக்கு
எடுத்தக் கர்ணன் கண்ணீர்

அந்தக் கண்ணன் கூட
என் கண்களின்
சிரப்புஞ்சியைக் கண்டு
சிரித்துக் கொண்டு நிற்கிறான்

என்னிடம் மட்டுமே
எல்லோர் கண்ணீர்த்
துளிகளையும் விற்கிறான்

பிறக்கும்போதே
தோளில் இருக்க
வேண்டிய கை
என் கண்களில்
முளைத்தது
அந்தக் கை
அழுகை

அழுகையை
நிறுத்த
இரு கையும்
எல்லா கடவுளிடமும்
நடத்திவிட்டது தொழுகை

முகத்தில்
அழகையும்
அகத்தில்
அழுக்கையும்
கொண்ட மனிதர்களுக்கு
மத்தியில்
நாம் வாழ்கிறோம்
என்பது இப்போதுதான்
உரைத்தது
என் புத்தியில்

எழுதியவர் : புதுவைக் குமார் (23-Jul-19, 4:17 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 60

மேலே