எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பச்சிளம் பயணம் கருவாகி கால மாத பத்து கணக்கில்...

பச்சிளம் பயணம்


கருவாகி
கால மாத பத்து
கணக்கில் உருவாகி
கருவறை
கதவு திறந்து
படுத்தே பயண பட்டு
பச்சிளமாய் வந்தேன்
இப்பாருக்கு

தொடர் கொடியை
துண்டித்த பின்
துக்கம் தாளவில்லை
அழுது உணர்த்தினேன்
அதுவே எனது பாஷை
அப்போது

தொட்டிலாய் ஒரு மடி
தொடர்ச்சியாய் வந்ததும்
துண்டித்த சோகம் மறந்து
பால்கொடியை 
பற்றி கொண்டு
படரத் தொடங்கினேன்

பால் உண்பதும்
படுத்துறங்குவதும் என்
பகுத்தறிவுக்கு எட்டிய
ஒரேப்பணி

பால்கண்ணம்
பலூனாக உப்பியது
படுத்து கொண்டே
பயிற்சி கை,கால் உதைத்து

பக்கவாட்டில் சாய முயன்று
பலமுறை தோல்வி
பலன் கிட்டியது ஒரு நாள்
முதன் முதலில் என்
முதுகு வான் பார்த்தது

நீரா வேண்டும்?
நிலத்தில்
நீந்தியே தூரம் கடந்தேன்.

நிமிர்ந்த தண்டுவடம்
நீந்தவதற்கு தடை விதித்தது

தண்டுவடம் நிமிர்ந்தாலும்
தடுமாற்றம் கால்களில்

கை பற்றினேன் நடைவண்டி
கால் ஓட்டத்தில்
உயர்ந்து நின்றேன் ஒரு படி.


சங்கர் சேதுராமன்

பதிவு : SANKAR
நாள் : 1-Apr-19, 1:46 pm

மேலே