உலகம் உனக்கு மட்டுமா

மனித உடல் பாதிக்கப்படின்
மனங்கலங்கும் மனிதா
புனித மரம் சிதைக்கிறாயே
புரியுமா அதன் வலி உனக்கு.

ஆற்றின் அழகு குலைத்தாய்
பூமி பிளந்து ஆழத்தோண்டினாய்
பாறையை உடைத்துத் தூளாக்கினாய்
குளிரை ஆக்கி காற்றை சிதைத்தாய்

உதவாத உடல் கொண்டு
உறுதியானவற்றை எல்லாம் அழித்து
உனக்காக மாற்றிக் கொண்டாயே
உலகம் உனக்கு மட்டுமா சொந்தம் வந்தேறியே !
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Apr-19, 9:48 am)
Tanglish : ulakam unaku matuma
பார்வை : 1064

மேலே