முத்தும் எடுப்பேன்
முத்தும் எடுப்பேன்
கவிதை என்னும் கழனியில்
எண்ணம் ஏனும் ஏரில்
கருத்து,கற்பனை
காளைகளை பூட்டி
உழத்தொடங்கியிருக்கிறேன்
வித்தை எனும் விதை ஊனி
நன்பொருள் நாத்துவிட்டு
நற்புறமும் பிடிங்கி நட்டு
கசடுகளை களை பரித்து
கதிர் முற்றும்
காலத்திற்காக
காத்திருக்கிறேன்
சொற்கூட்டும்,பொருட்கூட்டும்
எண்ண ஓட்டங்களில் வந்தாலும்
சோதனை ஓட்டங்களாக கருதுகிறேன்
தமிழ்கடலின் கரையோரத்தில் நீந்தி கொண்டிருக்கிறேன்
ஆழ்கடலுக்கு போகச்சொல்லி
அறிவுரைக்கப்பட்டேன்
என் ஆக்கப்பணிக்கு
உங்கள் ஊக்கப்பணி
உடன் இருக்கும் போது
ஆழ்கடல் போவதென்ன
அதில் முழ்கி முத்தும் எடுப்பேன்.
சங்கர் சேதுராமன்