பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 7 சுலோகம் 13 14 15
![](https://eluthu.com/images/loading.gif)
13 .
எல்லா உயிரிடத் தும்பகை யற்றவனாய்
நல்நண்ப னாய்கருணை யோடகந்தை வன்மமதை
இல்சுக துக்கசம னாய் !
14 .
என்றும் மகிழ்வோன் பொறுமையோன் யோகியாய்
தன்னடகத் தோடுறுதி யாய்மனம் புத்தியென்னில்
வைப்பவன் என்பிரி யன் !
15 .
உலகத்திற் குத்துன்பம் தாரான்துன் பம்பெறான்
இவ்வுலகத் தால்கோபம் அச்சம் களிப்பு
கலக்கமிலான் என்பிரி யன் !
-----கீதன் கவின் சாரலன்