காதல்
பெண்ணே இது என்ன நியாயம்
தினம் தினம் என்னை நீபார்த்தும்
பார்காததுபோல் இருக்கின்றாய்,
நானோ உன்னைப் பார்த்த முதல்
என் மனதை உன்னிடமே தந்துவிட்டேன்
உந்தன் விழிகளின் இமைகளைக்கேள்
கண்மணிக்கு மெய்க்காப்பாளர் அல்லவா
கண்ணிமைகள், நீ பார்த்தும் பார்காததுபோல்
என்னைப் பார்க்கின்றாயே, அந்த நான்
நல்லவனா, தீயவனா, உனக்கேற்றவனா
என்பதைக் கூறிவிடும் உன் இமைகள் ,
உந்தன் விழிகளின் மெய்க்காப்பாளர்,
நான் நல்லவன் என்று கூறும் நானறிவேன்;
நான் நல்லவன் உன்னைக் காதலிக்க விரும்புபவன்
இன்னும் ஏனடி கண்ணே இப்படி உன் பார்வைக்காகவே
வாடி இருக்கும் எனக்கு உன் பார்வையால்
காதல் ஒளி தந்து என்னுள்ளத்தை உன் காதல்
ரசத்தால் நிரப்பி ஆனந்தம் பொங்கிட