சம்மதம் மொழிந்திடுவாய் பெண்ணே
தினம் தினம் நான் கடக்கும் பாதை
இன்று மட்டும் சொல்கிறது எத்தனை காதை
விழிகளில் வழியுது மதுவுண்ட போதை
உன் துளிதரிசனம் தீர்த்திடும் இவ்வுபாதை
என் ஐம்புலன் திறனாய்வு வெகுதூரம் செல்ல
புதிரான உன்மௌனம் எனை கொல்லுது மெல்ல
கனவுச் சிறகுகள் முளைக்குது என் விலாவில்
உன்னோடு கைகோர்த்து என் நெஞ்சம் உலாவில்
நினைவுகளில் நித்தம் நித்தம் உன் சாம்ராஜ்ஜியம்
நீயின்றி என்வாழ்வு மதிப்பற்ற பூஜ்ஜியம்
என் இதயம் நீ வீற்றிருக்கும் அரியாசனம்
எவருக்கும் அங்கில்லை சரியாசனம்
அதரங்களில் சம்மதத்தை மொழிந்திடுவாய் பெண்ணே
ஆயுளை உய்விக்கும் அவையாவும் சுவைத்... தேனே
மனமிறங்கி மழைமேகக் கூட்டமாய் நீ பொழிய
மண்டியிட்டு விழைகின்றேன் உனை மாலையிட்டு மகிழ......
கவிதாயினி அமுதா பொற்கொடி