அப்புனா சப்புனா

டேய் பொன்னையா, நீ அதிஷ்டசாலிடா.
@@@@
என்னம்மா சொல்லற?
@@@@
மொதப் பிரசவத்திலேயே உன்னோட மனைவி ரட்டை பெண் கொழந்தைகளப் பெத்திருக்கிறா. மகாலட்சுமிங்கடா. நம்ம ஊருல பொறக்கற கொழந்தைங்களுக்கு எல்லாம் நாகரிகமா இந்திப் பேரு வைக்கற அந்த இந்தித் தொடர் பாட்டி
இந்திராணிகிட்டப் போயி கொழந்தைங்களுக்கு என்ன பேருங்ஙளா வைக்கிறதுன்னு கேட்டுட்டு வாடா.
(அரை மணி நேரம் கழித்து வந்த பொன்னையன்)
@@@
அம்மா, பாட்டியக் கேட்டேன். ஒரு கொழந்தைக்கு 'அப்னா'ன்னும். இன்னொரு கொழந்தைக்கு 'சப்னா'ன்னும் பேரு வைக்கச் சொன்னாங்க.
@@@@
அடடா, நம்ம ஊருல எந்தக் கொழந்தைக்கும் வைக்காத இசுடைலான பேருங்கடா பொன்னையா. அப்புனா, சப்புனா. சுவீட்டான பேருங்கடா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Apna = my
Sapna = dream

எழுதியவர் : மலர் (13-Apr-19, 7:40 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 232

சிறந்த நகைச்சுவைகள்

மேலே